கொக்குவில் இந்துவில் இரண்டாம் நிலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று(16/07/2012) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்லுரி அதிபர் A. அகிலதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
கல்லூரி பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் யாவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். மலரும் புதிய வருடம் வெற்றிகள் படைத்திடும் , புதுமைகள் நிறைந்திடும் இனிய வருடமாய் அமைந்திட வாழ்த்துவதோடு , எம்மை வழிகாட்டி உருவாக்கிய கல்லூரித் தாயவள் மகுடம் சூடிட எல்லோரும் ஒன்றாய் உழைப்போம் வாரீர் என அழைப்பதில் பெருமகிழ்வடைகின்றது கொக்குவில் இந்து இனையதளம். நீயே விதையின் உறையுள் , நினதே எங்களின் உயர்வு , நினதடி யேத்துவோமே
அறிவுக் கடலொன்று அமைதியானது வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் கலந்துவிட்ட திருமதி. சுகிர்தலஸ்மி சுப்பிரமணியம் அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார் என்பதை எண்ணும் போது நெஞ்சம் கனக்கின்றது. தோற்றமும் மறைவும் தொல்லியல்பு என்று தேறும் பண்பே உலகை வாழ்விக்கின்றது எனும் உண்மையை மனம் உணர்ந்தாலும் ஒரு சிலரின் மறைவுகள் மறக்கமுடியாத தொன்றாய் மனதில் பதிந்துவிடுகின்றன.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர் மிக சிறப்பாக விளையாடி "இந்துக்களின் போர் 2011" வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர். 36 ஓட்டங்கள் 1 இன்னிங்கிஸ் வித்தியாசத்தில் யாழ் இந்துக் கல்லூரி அணியினரை வென்று "இந்துக்களின் போர் 2011" இனை கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றி கொண்டது.